உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மழைநீர் ஓடை ஆக்கிரமிப்பு அகற்றம்

மழைநீர் ஓடை ஆக்கிரமிப்பு அகற்றம்

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே மழைநீர் ஓடையை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதை அதிகாரிகள் அகற்றினர்.அருப்புக்கோட்டை அருகே மேட்டு தொட்டியம் குளம் உள்ளது. இங்குள்ள கண்மாய்க்கு பாலையம்பட்டி, தீர்த்தக்கரை பகுதி வழியாக மழை நீர் ஓடை உள்ளது. இந்த ஓடை அரசு ஆவணங்களில் வண்டிப் பாதை என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நீர்வழி ஓடையை அருப்புக்கோட்டை புறவழிச் சாலை அருகில் சில தனியார்கள் பிளாட் அமைத்துள்ளனர். இதற்காக அந்த வழியாக செல்லும் மழை நீர் ஓடையை ஆக்கிரமித்து அதன் மீது ரோடு போட்டுள்ளனர். இதுகுறித்து அந்த பகுதி விவசாயிகள் மாவட்ட கலெக்டருக்கு புகார் கொடுத்தனர். இதனையடுத்து வருவாய் துறை அதிகாரிகள் நேற்று ஆக்கிரமிப்புகளை அகற்றினர். ஓடையை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற மழை நீர் ஓடைகளை ஆக்கிரமிப்புகள் செய்யாத அளவிற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை