உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பாலித்தீன் தாளில் உணவை பரிமாறும் ஓட்டல்கள் உடல் நலம் பாதிக்கும் அபாயம்

பாலித்தீன் தாளில் உணவை பரிமாறும் ஓட்டல்கள் உடல் நலம் பாதிக்கும் அபாயம்

விருதுநகர்: மாவட்டதில் பாலித் தீன் தாளில் உணவை பரிமாறும் ஓட்டல்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை முளையிலே கிள்ளி எரியாது வேடிக்கை பார்க்கும் உணவுப்பாதுகாப்புத்துறை, நகராட்சி துறை அதிகாரிகளால் மக்கள் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர்.ஓட்டல்களில் உணவை வாழை இலையில் வைத்து தான் பரிமாற வேண்டும். மேலும் டீக்கடைகளில் வடைகளை பரிமாறும் போது வாழை இலையை தான் பயன்படுத்த வேண்டும். ஆனால் பல ஓட்டல்கள், டீக்கடைகள் இதை முறையாக பின்பற்றுவதில்லை. மலிவு விலையில் கிடைக்கும் பிளாஸ்டிக் தாள்களை இலைக்கு மாற்றாக பயன்படுத்துகின்றனர். மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஓட்டல்கள், டீக்கடைகளில் இவ்வாறே செய்கின்றனர்.ஒரு மாநகராட்சி, 5 நகராட்சிகளிலும் 40 மைக்ரானுக்கு குறைவானபாலிதீன் பைகள் விற்பனை படுஜோராக உள்ளது. ஒவ்வொரு முறை ரெய்டு நடத்தும் போதும் டன் கணக்கில் பைகள் பிடிபட்டு கொண்டே தான் இருக்கின்றனவே தவிர பாலித்தீன் பயன்பாடு குறைவதே கிடையாது. பாலித்தீன் பயன்பாட்டால், சுற்றுப்புறச்சூழல் மாசு, நிலத்தடி நீர் மட்டம் பாதிப்பு, விலங்கினங்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது.பாலித்தீன் தாளில் உணவு சாப்பிடுவோர் ஒவ்வாமை காரணமாக, வயிற்றுப்போக்கால் அவதிப்படுகின்றனர். பாலிதீன் பைகளில் சூடான டீ, சாம்பார், குருமா போன்வற்றை ஊற்றி கொடுப்பதை உண்ணும் போது குடல், தொண்டை, இரைப்பை, மலக்குடல் புற்றுநோய் உண்டாகிறது. வயிற்று போக்கு, சீதக்கழிச்சல் போன்றவைகளும் ஏற்படுகிறது என டாக்டர்கள் கூறுகின்றனர்.40 மைக்ரான் கீழ் பயன்படுத்தவில்லை என்றாலும், ஒரே மாதிரி தெரிய கூடிய மக்களிடம் எளிதில் மாட்டி கொள்ளாத பாலித்தீன் தாள் வகைகள் ஏராளம் உள்ளன. அவற்றில் மலிவு விலையில் உள்ளவற்றை வாங்கி ஓட்டல்களில் சிலர் பயன்படுத்துகின்றனர். ஆகவே மாவட்ட நிர்வாகம் உணவு பாதுகாப்புத்துறையினரை மீண்டும் சோதனை நடத்த உத்தரவிட வேண்டும்.அபராதம் விதிப்பதோடு நின்று விடாமல் மூன்று முறைக்கு மேல் சோதனையில் பிடிபட்ட கடைகளில் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும். இது போன்ற கடுமையான நடவடிக்கைகள் மூலம் மற்றவர்களுக்கு அச்சம் ஏற்படுவதுடன், விதிமுறைகளை முறையாக பின்பற்றி வாழை இலையிலே உணவை பரிமாறுவர்.இதனால் சுகாதார பாதிப்புகளால் மக்கள் பாதிக்கப்படுவதும் குறையும். ஆகவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ