மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
2 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
2 hour(s) ago
திருமங்கலம், : விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ரவி 62. நேற்று இவர் தனது காரை சர்வீசுக்கு விடுவதற்காக காரை ஓட்டிக்கொண்டு மதுரைக்கு வந்தார். கப்பலூர் டோல்கேட் அருகே வந்த போது இவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. காரை சர்வீஸ் ரோட்டில் நிறுத்த முயன்ற போது அருகேயுள்ள ரோட்டோர பள்ளத்தில் சாய்ந்து நின்றது. காரிலேயே ரவி உயிரிழந்தார். கார் பள்ளத்தில் நிற்பது குறித்து தகவல் அறிந்த திருமங்கலம் போலீசார் காரை திறந்து பார்த்த போது டிரைவர் சீட்டில் ரவி உயிரிழந்த நிலையில் இருந்தார். லைசென்ஸ் மூலமாக முகவரியை அறிந்து சாத்தூரில் உள்ள குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர்.
2 hour(s) ago
2 hour(s) ago