உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விவசாய நிலங்களுக்கு ரோடு வசதி; அச்சங்குளம் மக்கள் மறியல்

விவசாய நிலங்களுக்கு ரோடு வசதி; அச்சங்குளம் மக்கள் மறியல்

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துாரில் விவசாய நிலங்களுக்கு செல்வதற்கு ரோடு வசதி கேட்டு அச்சங்குளம் கிராம மக்கள் நான்கு வழிச்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையம் வரை செல்லும் நான்கு வழிச்சாலை ஸ்ரீவில்லிபுத்துார் தாலுகாவில் கரைவளைந்தான்பட்டி, அச்சங்குளம், கடம்பன்குளம் கிராமங்கள் வழியாக செல்கிறது.இதில் நான்கு வழிச்சாலையின் மேற்கு பகுதியில் உள்ள சுமார் 600 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு செல்வதற்கு இதுவரை இருந்த மண் ரோட்டை விவசாயிகள், மக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது பாதை அடைக்கப்பட்டு சுமார் ஐந்து கிலோ மீட்டர் சுற்றிச் செல்லும் அளவிற்கு நான்கு வழி சாலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் விளைபொருட்களை அறுவடை செய்ய இயந்திரங்கள், டிராக்டர்கள், கனரக வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்தவில்லை. ரோடு பயன்பாட்டுக்கு வரும் வரை மக்கள் மிகுந்த சிரமத்திற்கும் ஆளாகவும் அபாயம் உள்ளது.எனவே, விவசாய நிலங்களுக்கு செல்வதற்கு முறையான தார் ரோடு வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரி வந்தனர். இக்கோரிக்கையை வலியுறுத்தி நேற்று காலை 8:00 மணி அளவில் அச்சங்குளம் கிராம மக்கள் நான்கு வழி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நான்கு வழிச்சாலை பணிக்காக கனரக வாகனங்கள் செல்வது பாதிக்கப்பட்டது ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் இன்ஸ்பெக்டர் கண்ணன் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். வருவாய்த்துறை நெடுஞ்சாலை ஆணையத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து, கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியதால் மறியல் கைவிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை