உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குழாய் பதிப்பதற்காக கிடப்பில் ரோடு பணி

குழாய் பதிப்பதற்காக கிடப்பில் ரோடு பணி

சிவகாசி : சிவகாசி அருகே திருத்தங்கல் திருவள்ளுவர் காலனியில் புதிதாக வாறுகால் அமைக்கப்பட்ட நிலையில் ரோடு போடும் பணி கிடப்பில் போடப்பட்டதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.சிவகாசி அருகே திருத்தங்கல் திருவள்ளுவர் காலனியில் உள்ள தெருவில் ரோடு, வாறுகால் சேதம் அடைந்திருந்தது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு புதிதாக வாறுகால் அமைக்கப்பட்டது. ரோடு போடுவதற்காக முதற்கட்ட பணிகள் துவங்கிய நிலையில் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.ஏனெனில் இங்கு குழாய்கள் பதிக்கப்பட்ட பின்னரே ரோடு போட வேண்டும் என மக்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் குழாய்கள் பதிக்கப்படாததால் அடுத்த கட்டப் பணிகள் எதுவும் துவங்கவில்லை. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்திற்கு சிரமம் ஏற்படுகிறது. தெரு முழுவதுமே சகதியாக மாறி விடுவதால் மக்கள் நடந்து செல்லவே சிரமப்படுகின்றனர். எனவே இங்கு உடனடியாக ரோடு போடும் பணியை துவங்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ