உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பயன்பாட்டிற்கு வந்த சுகாதாரவளாகம்

பயன்பாட்டிற்கு வந்த சுகாதாரவளாகம்

சிவகாசி, : சிவகாசி அருகே திருத்தங்கல் திருவள்ளுவர் காலனியில் மகளிர் சுகாதார வளாகம் பயன்பாட்டில் இல்லாததால் அப்பகுதி பெண்கள் திறந்த வெளியை கழிப்பறையாக பயன்படுத்தினர்.தவிர வளாகத்தில் மராமத்து பணி என்ற பெயரில் பெயின்ட் மட்டும் அடிக்கப்பட்ட நிலையில் வேற எந்த பணியும் நடக்கவில்லை. தண்ணீர், மின் வசதி இல்லாததால் சுகாதார வளாகத்தை பயன்படுத்த முடியவில்லை. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக மேயர் சங்கீதா, கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, மாநகர் நல அலுவலர் சரோஜா சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்தனர். அதன்படி இங்கு சேதம் அடைந்த கதவுகள் சரி செய்யப்பட்டு தண்ணீர், மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி