உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இடமிருந்தும் குடியிருப்பு கட்டாததால் சிரமத்தில் சாத்துார் தாலுகா போலீசார்

இடமிருந்தும் குடியிருப்பு கட்டாததால் சிரமத்தில் சாத்துார் தாலுகா போலீசார்

சாத்துார்: சாத்துார் தாலுகா காவலர்களுக்கு குடியிருப்புகள் கட்ட இடம் ஒதுக்கி பல ஆண்டாகியும் இதுவரை குடியிருப்பு கட்டாததால் போலீசார் சிரமமடைந்து வருகின்றனர். சாத்துார் தாலுகா போலீஸ் ஸ்டேஷன் சடையம்பட்டி ஊராட்சியில் உள்ளது. தாலுகா போலீஸ் ஸ்டேஷன் கட்டுவதற்கு இடம் ஒதுக்கிய போது சாத்துார் கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் வளரும் நகர் பகுதியில் போலீசார் குடியிருப்புக்காக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இடம் ஒதுக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் இங்கு காவலர்களுக்கான குடியிருப்பு வீடு கட்டுவதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.தற்போது தாலுகா காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் எஸ்.ஐ.,க்கள், இன்ஸ்பெக்டர் சாத்துார் சுற்று கிராமங்களில வாடகை வீடுகளில் தங்கி வருகின்றனர். காவலர் குடியிருப்பு கட்டியிருந்தால் இந்த போலீசார் குறைந்த வாடகையில் வீடு வசதி கிடைக்கும்.மேலும் பல கிலோமீட்டர் துாரத்திலிருந்து வரும் போலீசார் போலீஸ் ஸ்டேஷன் அருகிலேயே வசித்து தங்கள் பணிகளை செய்ய வசதியாக இருக்கும். எனவே சடையம்பட்டியில் தாலுகா போலீசாருக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் காவலர் குடியிருப்பு அமைக்க மாவட்ட போலீஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசார் விரும்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை