உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பள்ளி கல்லுாரி செய்திகள்

பள்ளி கல்லுாரி செய்திகள்

கல்லுாரி ஆண்டு விழாசத்திரப்பட்டி: சத்திரப்பட்டி அருகே மொட்டமலை பாலகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி சார்பில் 15வது ஆண்டு விழா நடந்தது. தாளாளர் மாடசாமி தலைமை வகித்தார். செயலாளர் டாக்டர் சுரேஷ் முன்னிலை வகித்தார்.கடந்த ஆண்டு அதிக மதிப்பெண், வருகை பதிவேடு, விளையாட்டு , ஒழுக்கம் உள்ளிட்டவைகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு சான்றிதழ், நினைவுகள் பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாணவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.----மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு ராஜபாளையம்: ராஜபாளையம் ராம்கோ தொழில்நுட்ப கல்லுாரி இயந்திரவியல் துறை சார்பில் பல்வேறு தலைப்புகளில் பள்ளி இறுதி படிப்பு முடித்த மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடந்தது.மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 65ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். துறை சார்பாக வினாடி வினா போட்டிகள் நடைபெற்றது.இயந்திரவியல் பொறியியல் துறை சார்பில் நடந்த 2 நாள் கருத்தரங்கில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ