உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / எஸ்.எப்.ஆர்., கல்லுாரியில்உயிர் காப்போம் நிகழ்ச்சி

எஸ்.எப்.ஆர்., கல்லுாரியில்உயிர் காப்போம் நிகழ்ச்சி

சிவகாசி: சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரி உடற்கல்வித்துறை, இந்திய மருத்துவ சங்கம் சிவகாசி கிளை சார்பில் முதல்வரின் ஜீவன் அனைவரும் உயிர் காப்போம் நிகழ்ச்சி துவக்க விழா நடந்தது.கல்லுாரி முதல்வர் சுதா பெரியதாய் தலைமை வகித்தார். உடற்கல்வி இயக்குனர் விஜயகுமாரி வரவேற்றார். மயக்க மருந்தியல் டாக்டர் ஸ்ரீதர் ஸ்ரீ கிஷோர், உயிர் காக்கும் சிகிச்சைகள் பற்றி விளக்கினார். தமிழக முதல்வர் தலைமைச் செயலகத்தில் தொடக்க விழா நடத்திய ஜீவன் திட்டம் நேரலையாக மாணவிகளுக்கு காண்பிக்கப்பட்டது. இந்திய மருத்துவ சங்கம் கிளையை சேர்ந்த டாக்டர்கள் செல்லத்தாய், கோபி ஸ்ரீ, சண்முகராஜன், ரத்தினம், சித்ரா, உட்பட பலர் மாணவிகளுக்கு செயல்முறை விளக்கமளித்தனர். தொடர்ந்து போதை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. வேதியியல் துறை உதவி பேராசிரியர் பொற்கொடி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ