மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
3 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
3 hour(s) ago
திருச்சுழி:விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே மைலி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா, 30. இவர் திருமணமாகி சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். இவரது குடும்பத்தினருக்கும், இவரது உறவினரான அதே ஊரைச் சேர்ந்த பாலமுருகன், 37, குடும்பத்தினருக்கும் சொத்து பிரச்னை இருந்தது. இது தொடர்பாக நேற்று முன்தினம் கருப்பையாவின் தந்தை கணேசனும், பாலமுருகனும் மோதிக்கொண்டனர். படுகாயமடைந்த கணேசன், 55, திருச்சுழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். திருச்சுழி போலீசார் பாலமுருகனை தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த பாலமுருகன், கணேசனை தேடி நேற்று காலை 6:50 மணிக்கு மருத்துவமனைக்கு வந்து தகராறு செய்தார்.வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. இதில் பாலமுருகன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கணேசனை வெட்டினார். அப்போது அங்கிருந்த மகன் கருப்பையா விலக்க முற்பட்டதில் அவருக்கும் பலத்த வெட்டு விழுந்தது.இதில், மருத்துவமனை வளாகத்திலேயே கருப்பையா இறந்தார். படுகாயமடைந்த கணேசன் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பாலமுருகனை திருச்சுழி போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
3 hour(s) ago
3 hour(s) ago