| ADDED : ஜூன் 23, 2024 03:17 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு;இந்திய உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரச முறையில் தீர்வு காண ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 8 வரை சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடத்த உச்ச நீதிமன்றம் ஏற்பாடு செய்துள்ளது. இதில் வழக்குரைஞர்கள் மற்றும் வழக்காடிகள் இருதரப்பினரும் பங்கேற்று தங்களது வழக்குகளை சமரசமாக முடிக்க நேரிலோ அல்லது இணையதள வசதி மூலமாகவோ தொடர்பு கொண்டு, சமரசமுறையில் குறைந்த செலவில் தீர்வு காணலாம். இதில் நீதிமன்ற முத்திரைக் கட்டணம் முழுவதுமாக திரும்ப பெறுதல், இறுதி மற்றும் செயல்படுத்துவதற்கான உத்தரவுகள் ஆகியவை இதன் சிறப்பம்சங்கள் ஆகும்.எனவே, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது வழக்குகள் ஏதேனும் இந்திய உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தால் அந்த வழக்குகளை சமரச முறையில் சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு காணலாம். சம்பந்தப்பட்ட விவரங்களை தங்களது அருகில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் சட்ட உதவி மையத்தில் தெரிவிக்கலாம்.ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்டம் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழுவினை, 04563- 260 310 என்ற தொலைபேசி மூலமும், இ மெயில் மூலமும் தொடர்பு கொள்ளலாம்.மேலும், மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உதவி எண் 044-25 342 441 மூலமும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இதனை விருதுநகர் மாவட்ட மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.