மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
8 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
8 hour(s) ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் ரேஷன் கடையில் வாங்கிய சீனியில் துர்நாற்றம் வீசுவதாக துடியாண்டியம்மன் கோவில் தெரு மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.ஸ்ரீவில்லிபுத்தூர் துடியாண்டியம்மன் கோவில் தெருவில் சுமார் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதி மக்கள் திருமுக்குளம் ஆஞ்சநேயர் கோவில் அருகில் உள்ள ரேஷன் கடையில் தங்களது ரேஷன் பொருட்களை வாங்குகின்றனர்.கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த ரேஷன் கடையில் வாங்கிய சீனியில், எலி இறந்து கிடந்ததால் வீசும் துர்நாற்றம் வீசி உள்ளது. இது குறித்து மக்கள் சம்பந்தப்பட்ட ரேஷன் கடையில் புகார் தெரிவித்துள்ளனர். அதனை ரேஷன் கடை பொறுப்பாளர்கள் அலட்சியப்படுத்தி உள்ளனர்.எனவே, தங்களுக்கு வழங்கப்பட்ட சீனியை மாற்றித் தருமாறும், அனைத்து கடைகளிலும் உணவுப் பொருட்கள் சுகாதாரமான, பாதுகாப்பு முறையில் உள்ளதா என்பதை உணவுப் பொருள் வழங்கல் அலுவலர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.ரேஷன் கடையை ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் முத்துமாரி தெரிவித்தார்.
8 hour(s) ago
8 hour(s) ago