மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
11 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
11 hour(s) ago
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் போலீஸ் ஏட்டுக்களுக்கு எஸ்.எஸ்.ஐ., பதவி உயர்வு வழங்க கால தாமதமாவதால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.தமிழக அரசு போலீஸ் துறையில் 1999 ஆண்டு இரண்டாம் நிலை போலீசாக பணியில் சேர்ந்தவர்களுக்கு ஜூன் 1 முதல் எஸ்.எஸ்.ஐ., பதவி உயர்வு வழங்கி இருக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிகள் முடிவடைந்தையடுத்து தற்போது அனைத்து மாவட்டங்களிலும் எஸ்.எஸ்.ஐ., பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் ஆயுதப்படை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, சாத்துார், காரியப்பட்டி, ஸ்ரீவில்லிப்புத்துார், ராஜபாளையம் ஆகிய நகர் பகுதிகள், அதனை சுற்றிய ஊரகப்பகுதிகளில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் 50க்கும் மேற்பட்ட ஏட்டுக்கள், எஸ்.எஸ்.ஐ., பதவி உயர்வுக்காக காத்திருக்கின்றனர்.இந்த பதவி உயர்வு வழங்குவதில் தொடர்ந்து கால தாமதம் ஏற்படுகிறது. மேலும் வங்கி கடனில் இருந்தவர்கள் பதவி உயர்வு கிடைத்தால் பொருளாதார ரீதியில் உதவியாக இருக்கும் என நினைத்து எதிர்பார்புடன் இருந்த ஏட்டுகள், தற்போது பதவி உயர்வுக்கு கால தாமதமாவதால் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.எனவே மாவட்டத்தில் எஸ்.எஸ்.ஐ., பதவி உயர்வுக்காக காத்திருக்கும் போலீசாருக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
11 hour(s) ago
11 hour(s) ago