உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பள்ளி வளாக கட்டட கழிவுகளை அகற்ற மாணவர்களை பயன்படுத்தும் அவலம்

பள்ளி வளாக கட்டட கழிவுகளை அகற்ற மாணவர்களை பயன்படுத்தும் அவலம்

விருதுநகர் : விருதுநகரில் அரசு பள்ளி வளாகம் ஒன்றில் குவிந்துள்ள கட்டட கழிவுகளை அகற்ற மாணவர்களை பயன்படுத்தும் வீடியோ வெளியாகி வருகிறது.மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய பயன்படுத்துவதோ, குப்பையை அள்ள பயன்படுத்துவதோ தவறான செயல். ஆனால் சில அரசு பள்ளிகளில் இந்த பிரச்னை நடந்துள்ளது. இந்நிலையில் விருதுநகரில் அரசு பள்ளி வளாகம் ஒன்றில் குவிந்துள்ள கட்டட கழிவுகளை மாணவர்கள் அப்புறப்படுத்தும் வீடியோ பரவி வருகிறது. மாணவர்களை பள்ளிக்கு படிக்க அனுப்பினால், அவர்களை சுமை துாக்குபவர்களாகவும், துாய்மை செய்வோர் போல அரசு பள்ளி நிர்வாகங்கள் நடத்துகின்றன என பெற்றோர் குமுறுகின்றனர்.குறிப்பாக இது போன்ற கட்டட கழிவுகளை அப்புறப்படுத்த பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ள பொது நிதியை செலவிட்டு ஆட்களை வைத்து அகற்ற வாய்ப்பிருந்தும் ஏன் மாணவர்களை பயன்படுத்த வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது.ஏற்கனவே சுற்றுச்சுவர் இல்லாத நிலை, சேதமடைந்த கட்டடங்களை கொண்டுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு கற்றல் திறன் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது போன்ற செயல்களில் மாணவர்களை ஈடுபடுத்துவது குற்றம் என பள்ளிக்கல்வித்துறையினர் அறிவுறுத்த வேண்டும். மாவட்ட நிர்வாகம் வீடியோவை கண்டறிந்து சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்