| ADDED : ஜூலை 17, 2024 12:13 AM
விருதுநகர் : விண்ணப்பித்து நீண்ட காலமாக காத்திருப்போருக்கு உதவி தொகை வழங்குவது, மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்பங்களுக்கு 35 கிலோ அரிசி வழங்குவது, அலுவலரின் காலிப்பணியிடத்தை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் அவர்களையே ஒப்படைக்கும் போராட்டம் நடந்தது.மாவட்டச் செயலாளர் கே.நாகராஜ் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் நடராஜன், பொருளாளர் அன்புச்செல்வன், விவசாயத் தொழிலாளர் சங்க செயலாளர் எம் சுந்தரபாண்டியன் பேசினர்.கலெக்டர் ஜெயசீலன், மாற்றுத் திறனாளிகள் சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். முடிவில் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எழுத்துப் பூர்வமாக ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.