மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
16 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
16 hour(s) ago
காரியாபட்டி:காரியாபட்டி அருகே சோலார் பிளான்ட் அமைக்க கிராமத்தினர் எதிர்ப்பையும் மீறி பணிகளை துவங்கியதால் மக்கள் ரோட்டை துண்டித்தனர். காரியாபட்டி டி.கடமங்குளம், கே. பனைக்குளம் பகுதியில் சோலார் பிளான்ட் அமைத்து செயல்பாட்டில் இருந்து வருகிறது. கண்மாய் கரைகளை சேதப்படுத்தி, ஓடைகளை ஆக்கிரமித்துஉள்ளதால் அப்பகுதியில் உள்ள நீர்நிலைகள், விவசாயம் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டினர். மேலும் ஓடையை மறைத்து கிராவல் மண் போட்டு ரோடு போட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு சோலார் பிளான்ட்டை அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் கூடுதலாக சோலார் பிளான்ட் அமைக்க பணிகள் துவக்கப்பட்டன. இதற்கு கிராமத்தினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த இரு கிராமத்தினரும் அங்கு சென்று வரத்துக் கால்வாயை மறைத்து கிராவல் மண் கொட்டி போடப்பட்டிருந்த ரோட்டை தோண்டி பள் ளம் ஏற்படுத்தி, போராட் டம் நடத்தி வருகின்றனர்.
16 hour(s) ago
16 hour(s) ago