மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
1 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
1 hour(s) ago
சாத்துார் : சாத்துார் ஊராட்சி ஒன்றியம் சடையம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வளரும் நகரில் ரோடு தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி மக்கள் அவதிப்படுகின்றனர்.சாத்துார் சடையம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வளரும் நகரில் நுாற்றுக்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன. நகர் உருவாகி 25 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் இந்தப் பகுதியில் முறையான ரோடு தெருவிளக்கு உள்ளிட்ட வசதிகள் இன்றி காணப்படுகிறது. சாத்துார் தாலுகா போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்லும் ரோடு மட்டுமே போடப்பட்டுள்ளது மற்ற தெரு சாலைகள் எல்லாம் மண் சாலையாக காணப்படுகிறது.சிறிய மழை பெய்தாலும் பாதை முழுவதும் சேரும் சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் இப்பகுதியில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாமல் தவிக்கும் நிலை உள்ளது.போதுமான தெருவிளக்குகள் இல்லை . புதிய புதிய வீடுகள் உருவாகி வரும் நிலையில் வளரும் நகர் பகுதியில் ரோடு தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
1 hour(s) ago
1 hour(s) ago