மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
7 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
7 hour(s) ago
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜாரில் இருந்து அரசு மருத்துவமனை வரை ரோட்டின் இரு புறமும் டூவீலர்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால் பஸ்கள் எளிதில் வந்து செல்ல முடியாமல் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.நாளுக்கு நாள் வாகனங்களும், மக்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் பகுதியாக வத்திராயிருப்பு வளர்ந்து வருகிறது. தனி தாலுகாவாக உருவாக்கப்பட்ட நிலையில், இம்மாத இறுதிக்குள் நீதிமன்றமும் திறக்கப்பட உள்ளது.இந்நிலையில் வத்திராயிருப்பு நுழைவு பகுதி முத்தாலம்மன் பஜாரில் இருந்து அரசு மருத்துவமனை வரை ரோட்டின் இருபுறமும் டூவீலர்கள், லோடு வேன்கள் நிறுத்தப்படுவதால் காலை, மாலை வேலை நேரங்களில் பஸ்கள் எளிதில் வந்து செல்ல முடியவில்லை. விபத்துகளில் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்படும் நோயாளிகளை விரைந்து கொண்டு வருவதில் 108 ஆம்புலன்ஸ்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறது.எனவே வத்திராயிருப்பு பஜாரில் ஆக்கிரமிப்புகளை அகற்றியும், தாறுமாறாக நிறுத்தப்படும் டூவீலர்களை அப்புறப்படுத்தியும் எளிதில் பஸ்கள், ஆம்புலன்ஸ்கள் வந்து செல்லும் நிலையை போலீசார் ஏற்படுத்த வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
7 hour(s) ago
7 hour(s) ago