உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ராஜபாளையம் இணைப்பு சாலையால் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் பாதிப்பு

ராஜபாளையம் இணைப்பு சாலையால் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் பாதிப்பு

ராஜபாளையம்: ராஜபாளையம் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் காம்பவுண்ட் நடுவே புதிய இணைப்புச் சாலை எல்லைக்கல் அமைக்கப்பட்டுள்ளதுடன் குறியீடு செய்யப்பட்டதால் போர்வெல், வாகன நிறுத்துமிடம் பாதிக்கப்பட உள்ளது. ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து தென்காசி ரோட்டிற்கு இணைப்பு சாலை பணிகள் ரூ.38.34 கோடி மதிப்பில் 2.10 கி.மீ துாரத்தில் 100 அடி அகலமாக நிலம் கையகப்படுத்தப்பட்டு பிப்.8ல் பணிகள் தொடங்கியுள்ளது. இதன் அருகே போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் காம்பவுண்டு சுவரில் நெடுஞ்சாலை நில எடுப்பிற்கான எல்லைக்கல் வைக்கப்பட்டுள்ளதுடன் போலீஸ் ஸ்டேஷன் காம்பவுண்ட் உள் பகுதி பிரதான கட்டிடத்தின் அருகேயும் குறியீடு செய்யப்பட்டுள்ளது. போலீஸ் ஸ்டேஷனுக்கு வெளியே அமைந்து தற்போது தண்ணீர் சப்ளையாகும் போர்வெல்லும் சாலை பணிகளுக்கு எடுக்கப்படும் நிலை உள்ளது.முறையாக இடத்தை கணக்கிட்டு அமைக்காததால் 2023 ஜூன் மாதம் அமைக்கப்பட்டு இரண்டு வருடத்திற்குள்ளேயே சாலை பணிகளுக்காக போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனின் வாகன நிறுத்தமிடம், போர்வெல் பாதிக்கப்பட உள்ளது. இதுகுறித்து நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் ஜெகன் செல்வராஜ்: போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் காம்பவுண்டில் பாதை வருவது உண்மையே. இணைப்புச்சாலை பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட எல்லை அளவிடப்பட்டு அதற்கான இடத்தில்தான் சர்வேகல் பதிக்கப்பட்டுள்ளது. 10 மீட்டர் அகலத்தில் மட்டும் தான் சாலை அமைக்கப்பட உள்ளதால் அமைக்கும் பணி தொடங்கும் போது தேவை எனில் முழுமையான நில எடுப்பு பணி தெரியவரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ