உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விவசாயிகள் குழுக்களுக்கான பயிற்சி

விவசாயிகள் குழுக்களுக்கான பயிற்சி

அருப்புக்கோட்டை- அருப்புக்கோட்டை அருகே செந்நிலைகுடி கிராமத்தில் விருதுநகர் மாவட்ட வேளாண்துறை விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் கிராம முன்னேற்ற விவசாயிகள்குழு கூட்டபயிற்சி நடந்தது. வேளாண்மை உதவி இயக்குனர் குமரன் தலைமை வகித்தார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் நாச்சியாரம்மாள் தொழில்நுட்ப உரையாற்றினார். இதில் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் கலந்து கொண்டு வேளாண் திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார். இதில் விவசாயிகளின் பங்கு குறித்து விளக்கினார். மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் விஜயா, வேளாண் நிலைய உதவி பேராசிரியர் வேணுதேவன் உட்பட பலர் பேசினார். ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் ராஜலட்சுமி, முத்துராஜ் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை