உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சாய்ந்த நிலையில் டிரான்ஸ்பார்மர்

சாய்ந்த நிலையில் டிரான்ஸ்பார்மர்

விருதுநகர் : விருதுநகரில் பேராலி ரோட்டில் சாய்ந்த நிலையில் டிரான்ஸ்பார்மர் இருப்பதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.விருதுநகர் பேராலி ரோட்டில் சாய்ந்த நிலையில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இது கிராமத்திற்கு செல்லும் வழித்தடம். இவ்வழியாக ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த டிரான்பார்மர் மூலம் அருகே உள்ள குடியிருப்புகளில் மின் வினியோகம் நடந்து வருகிறது. இந்த டிரான்ஸ்பார்மர் சற்று சரிந்துள்ளதால் விபத்து அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது.தற்போது மாவட்ட மின் வாரியம் பல்வேறு மின் பராமரிப்பு பணிகளை செய்து வருகிறது. அதனுடன் இதையும் இணைத்து இந்த டிரான்ஸ்பார்மருக்கும் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துவது எதிர்கால விபத்துக்களை தவிர்க்கும். மேலும் இது போன்று கான்கிரீட் மீது அமைக்கப்பட்டுள்ள டிரான்ஸ்பார்மர்களின் உறுதித்தன்மையை மின் ஊழியர்களை கொண்டு ஆய்வு செய்வதும் அவசியமாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ