உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குப்பைத் தொட்டியாக டிரான்ஸ்பார்மர்கள்

குப்பைத் தொட்டியாக டிரான்ஸ்பார்மர்கள்

சிவகாசி: குப்பைத் தொட்டிகளாக மாறிவரும் டிரான்ஸ்பார்மர்கள் அருகே தீ வைப்பதால் விபத்து அபாயம் ஏற்படுகிறது. எனவே டிரான்ஸ்பார்மர் அருகே குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும். சிவகாசி மாநகராட்சியில் குடியிருப்புப் பகுதிகள், ரோட்டோரங்களில் ஏராளமான டிரான்ஸ்பார்மர்கள் உள்ளன. திறந்தவெளியில் டிரான்ஸ்பார்மர்கள் இருந்தால் அதன் அருகே விபரீதம் அறியாமல் மக்கள் சென்றால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் ஆடு, மாடு போன்ற கால்நடைகள் தெரியாமல் உரசினாலும் விபத்து அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் அனைத்து டிரான்ஸ்பார்மர்களை சுற்றிலும் பாதுகாப்பு தடுப்பு அமைக்கப்பட்டுஉள்ளது. ஆனால் இதனை மக்கள் தவறாக பயன்படுத்தி வருகின்றனர்.பாதுகாப்பு தடுப்புகள் வெளியிலிருந்து பார்ப்பதற்கு குப்பைத் தொட்டி போல் காட்சி அளிப்பதால் மக்கள், கடை உரிமையாளர்கள் தங்களது குப்பைகளை இதற்குள் போட்டு விடுகின்றனர். இதனைக் கண்டறிந்து அகற்றுவதற்கும் வழி இல்லை. இதில் யாராவது தெரியாமல் தீ வைத்தால் டிரான்ஸ்பார்மரில் தீப்பிடித்து பெரிய அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது.நேற்று வெம்பக்கோட்டை ரோடு பன்னீர் தெப்பம் அருகே ரோட்டோரத்தில் இருந்த டிரான்ஸ்பார்மரில் இதேபோல் பாதுகாப்பு தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது. இதற்குள்கொட்டப்பட்டிருந்த குப்பையில் தீப்பிடித்து டிரான்ஸ்பார்மரில் பரவியது. உடனடியாக வந்த தீயணைப்புத் துறையினர் வேறு அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்னர் தீயை அனைத்தனர்.எனவே மக்கள் டிரான்ஸ்பார்மரில் குப்பைகளை கொட்டுவதை தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி