உள்ளூர் செய்திகள்

சிகிச்சை முகாம்

விருதுநகர் : விருதுநகர் அல்லம்பட்டி தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, விருதுநகர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச்சங்கம் சார்பில் அல்லம்பட்டி வி.பி.பெரியசாமி நாடார் மேல்நிலைப்பள்ளியில் இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம் நடந்தது.இந்த முகாமை வங்கி மேலாளர் சுந்தர் தலைமை வகித்து துவக்கி வைத்தார். மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் பொறுப்பாளர் சுரேஷ் தலைமையிலான மருத்துவக்குழு சிகிச்சை வழங்கியது. உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் ரத்த அழுத்தம், கிட்ட, துார பார்வை பரிசோதனைகள் செய்யப்பட்டன. 168 பேர் பரிசோதனை செய்தனர். 40 பேருக்கான கண் கண்ணாடிகள் வங்கி நிதியில் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை