உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இரு அரசு பஸ்கள் ஜப்தி

இரு அரசு பஸ்கள் ஜப்தி

விருதுநகர்:-விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சி--அருப்புக்கோட்டை ரோட்டில்விபத்தில் பலியானவர் குடும்பத்திற்கு ரூ.39.20 லட்சம் இழப்பீடு வழங்காததால் நீதிமன்றஊழியர்கள் இரண்டு அரசு பஸ்களை ஜப்திசெய்தனர்.மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே சுந்தரகுண்டைச் சேர்ந்தவர்பூவேஷ்வரன் 28 .இவர் டூவீலரில் 2018 ஆக., 9ல் கல்குறிச்சி -- அருப்புக்கோட்டை ரோட்டில் சென்ற போது அரசு பஸ் மோதி பலியானார்.அவரது குடும்பத்தினர் நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்ந்தனர்.இவ்வழக்கில் விருதுநகர் அரசு போக்குவரத்துக் கழகம் ரூ.27 லட்சத்து35 ஆயிரத்து 600 இழப்பீடு வழங்கவும்,இத்தொகையை 7.5 சதவீத வட்டியுடன் சேர்த்து ரூ.39.20 லட்சத்தை முன்தேதியிட்டு கணக்கிட்டு பூவேஷ்வரன் குடும்பத்திற்கு வழங்க 2023 ஆக., 23ல் விருதுநகர் கூடுதல் மாவட்ட நீதிபதி டி.வி.ஹேமானந்த குமார் உத்தரவிட்டார். ஆனால் இழப்பீடு வழங்காததால்நீதிமன்றத்தில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படிவிருதுநகர் அரசுபோக்குவரத்து கழகத்திற்கு சொந்தமானஇரண்டு அரசுபஸ்களை நீதிமன்ற ஊழியர்கள் நேற்று ஜப்தி செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ