உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஊழல், மக்களை சுரண்டுவதை தடுக்க பா.ஜ.,வை ஆதரிக்க வேண்டும் வேலுார் இப்ராஹிம் பிரசாரம்

ஊழல், மக்களை சுரண்டுவதை தடுக்க பா.ஜ.,வை ஆதரிக்க வேண்டும் வேலுார் இப்ராஹிம் பிரசாரம்

விருதுநகர், : குடும்ப அரசியல், ஊழல், மக்களை சுரண்டுவதை தடுக்க பா.ஜ.,வை ஆதரிக்க வேண்டும்,” என விருதுநகரில் பா.ஜ.,சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலுார் இப்ராஹிம் பேசினார்.விருதுநகர் பா.ஜ., வேட்பாளர் ராதிகாவை ஆதரித்து பழைய பஸ் ஸ்டாண்ட், மெயின் பஜார்,அல்லம்பட்டி பாண்டியன் நகர் உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் செய்தார். அப்போதுஅவர் கூறியதாவது: பொருளாதாரத்தை 11வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு முன்னேற்றியவர் நம் பிரதமர் மோடி. 2019ல் ராகுல் பிரதமர் என்றார். 2024ல் எங்களுக்கு இண்டியா கூட்டணி தான் பிரதமர் வேட்பாளர். ராகுலை வேட்பாளராக முன்னிறுத்தவில்லை. தான் சொந்த தொகுதி அமேதியிலே தோற்று போனவர். தென்னிந்தியா வயநாடு தொகுதியில் நின்றார்.ஒரு மாநிலத்தில் தோழர் என்பீர்கள் இன்னொரு மாநிலத்தில் திட்டி கொள்வர். இது தான் இண்டியா கூட்டணி. பிரதம வேட்பாளரை அறிவிக்க தகுதியில்லாத இண்டியா கூட்டணி சிதறி கிடக்கிறது. இந்த மோசமான கூட்டணியை யாராவது ஆதரிப்பரா. மக்கள் இந்த முறை தி.மு.க.,வை புறக்கணிப்பர். அ.தி.மு.க.,வுக்கு யார் பிரதம வேட்பாளர். கேட்டால் மக்களுடன் கூட்டணி என்கின்றனர்.அ.தி.மு.க.,வினர் தி.மு.க.,வை திட்டுகின்றனர். தி.மு.க.,வினர் அ.தி.மு.க.,வை திட்டுகின்றனர். குடும்ப அரசியல், ஊழல், மக்களை சுரண்டுவதை தடுக்க இந்த இரு கட்சிகளையும் புறக்கணித்து பா.ஜ.,வை ஆதரிக்க வேண்டும், என்றார். கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன், லோக்சபா இணை அமைப்பாளர் கஜேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரசேகரன்உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை