உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பஸ் நேரத்தை மாற்றியமைக்க கிராமத்தினர் எதிர்பார்ப்பு

பஸ் நேரத்தை மாற்றியமைக்க கிராமத்தினர் எதிர்பார்ப்பு

காரியாபட்டி : மதுரையிலிருந்து காரியாபட்டி வழியாக கழுவனச்சேரிக்கு இயக்கப்படும் பஸ் நேரத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராமத்தினர் எதிர்பார்க்கின்றனர். காரியாபட்டி கழுவனச்சேரிக்கு மதுரையில் இருந்து அரசு டவுன் பஸ்அதிகாலை 5:30, இரவு 9:30 மணி என இரு முறை இயக்கப்பட்டு வருகிறது. இதனால் அக்கிராமத்தினருக்கு எந்த பயன்பாடும் கிடையாது. கடமைக்காக பஸ் இயக்கப்படுவதாக மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். பயணிகள் யாரும் இல்லாததால் பெரும்பாலான நேரங்களில் ஊருக்குள் வந்து செல்வது கிடையாது. ஆத்திர அவசரத்திற்கு பஸ்சில் செல்லலாம் என யாராவது காத்திருந்தால் பாதியிலே திரும்பி செல்வதால் ஏமாற்றம் அடைகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள், வெளியூர்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் என பலரும் காரியாபட்டிக்கு வந்து தான் பஸ் மாற வேண்டும். இதனால் நேரம், பணம் விரையம் ஆகிறது. மாணவர்கள் காலை, மாலை நடந்து சென்று வருவதால் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அக்கிராமத்தினரின் நலனை கருத்தில் கொண்டு பயனுள்ள வகையில் காலை 8:30, மதியம் 1:30, மாலை 5:00 மணிக்கு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராமத்தினர் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை