உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பராமரிப்பின்றி பாழாகும் விருதுநகர் நகராட்சி பூங்கா

பராமரிப்பின்றி பாழாகும் விருதுநகர் நகராட்சி பூங்கா

விருதுநகர்: விருதுநகர் நகராட்சி பூங்காவில் போதிய பராமரிப்பின்றி செயற்கை கற்கள், வட்ட வடிவ கான்கீரிட் தொட்டி நீருற்றுகள், மரத்தை சுற்றி அமைக்கப்பட்ட திண்ணைகள் பாழாகி வருகின்றன.விருதுநகர் நகராட்சி பூங்காவில் காலை, மாலை நேரங்களில் கர்ப்பிணிகள், நடைப்பயிற்சி, விளையாட பெற்றோருடன் வரும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.இந்நிலையில் நகராட்சி பூங்காவில் கற்கள் மூலம் அமைக்கப்பட்ட செயற்கை நீருற்று முறையாக பராமரிக்கப்படாததால் செயல்படாமல் உள்ளது. இந்த நீருற்றின் கற்கள் அனைத்தும் சிதிலமடைந்து சேதமாகி இடிந்து விழுந்துள்ளது. இதே போன்று வட்ட வடிவத்தில் கான்கீரிட்டில் கட்டப்பட்ட செயற்கை நீருற்றும் போதிய பராமரிப்பு செய்யப்படாமல் மழை நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக மாறியுள்ளது. கொசுக்கள் பூங்காவிற்கு வருபவர்களை கடிப்பதால் திரும்பும் போது நோயாளிகளாக செல்லும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.மேலும் பூங்காவில் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்ட மரங்கள் நன்றாக வளர்ந்து நிழல் தரும் நிலையில் உள்ளது. இந்த மரங்களை சுற்றி மக்கள் அமர்ந்து ஆரோக்கியமான காற்றை சுவாசிப்பதற்காக வட்ட வடிவில் செங்கல், சிமெண்ட் மூலம் திண்ணைகள் கட்டப்பட்டது. இந்த திண்ணைகளில் தற்போது விரிசல் ஏற்பட்டு இரண்டாக உடைந்து விழும் நிலையில் உள்ளது. இதில் அமருவதற்கே மக்கள் அச்சப்படுகின்றனர்.விளையாட்டு உபகரணங்களில் சமூக விரோதிகள் தங்களின் பெயர்களை பொறித்து வை க்கின்றனர். இதனால் கருவிகள் பாழாகி உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் விருதுநகர் நகராட்சி பூங்காவில் உள்ள குறைகளை களைந்து அனைவரும் பயன்படுத்தும் விதமாக சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ