மேலும் செய்திகள்
இன்று ஈர நில பறவைகள் கணக்கெடுப்பு பணி
08-Mar-2025
ஸ்ரீவில்லிபுத்துார்: தமிழகத்தில் 2 நாட்கள் நடந்த நீர்ப்பறவைகள் கணக்கெடுப்பின் போது சேகரிக்கப்பட்ட தரவுகளை மாநில நிபுணர் கமிட்டி குழுவினர் ஆய்வு செய்த பின்னரே பறவைகளின் முழு விவரங்கள், எண்ணிக்கை அதிகரித்தல் மற்றும் குறைதல் உட்பட பல்வேறு விவரங்கள் தெரியவருமென வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிந்த பின்பு ஆண்டுதோறும் நீர்ப்பறவைகள் மற்றும் நில பறவைகள் கணக்கெடுப்பு நடப்பது வழக்கம். இதன்படி இந்த ஆண்டும்மார்ச் 8, 9ல் ஒவ்வொரு மாவட்டத்திலும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் நீர்ப்பறவைகள் கணக்கெடுப்பு நடந்தது. இதில் வனத்துறை ஊழியர் ஒருவர், பறவை ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள் கொண்ட குழுவினர் ஈடுபட்டனர். இதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும்கண்டறியப்பட்ட நீர்ப்பறவை தரவுகளை நேற்று முன்தினம் தான், கணக்கெடுப்பாளர்கள் வனத்துறை அலுவலகங்களில் ஒப்படைத்தனர்.இதனை முழு அளவில் சேகரித்து அதனை ஒட்டுமொத்தமாக மாநில வனத்துறை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதனை மாநில அளவிலான நிபுணர் கமிட்டி குழுவினர் ஒவ்வொரு தரவாக ஆய்வு செய்து தமிழகத்தில் என்னென்ன வகை பறவைகள் உள்ளது, பறவைகளின் எண்ணிக்கை எங்கு அதிகரித்துள்ளது, குறைந்துள்ளது, நீர்ப்பறவைகள் வாழ்விடங்களில் உள்ள குறைகள் மற்றும் மாசுக்கள் குறித்து நிபுணர் குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர்.இதன் பிறகு தான் நீர் பறவைகள் கணக்கெடுப்பு பற்றிய உண்மையான தகவல்கள் அறிவிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.இந்நிலையில் மார்ச் 15, 16 தேதிகளில் மாநில அளவிலான நிலப்பறவைகள் கணக்கெடுப்பு பணி நடக்க உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை அந்தந்த மாவட்ட வனத்துறையினர் செய்துள்ளனர்.
08-Mar-2025