மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
17 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
17 hour(s) ago
ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருகே கள்ளக்காதலியை அடித்துக் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.ஆலங்குளம் அருகே லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் முத்தையா,37. இவரது மனைவி ராஜேஸ்வரி, 32. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.அதே பகுதியை சேர்ந்த குமார், 28, என்பவருடன் ராஜேஸ்வரிக்கு தொடர்பு ஏற்பட்டது. இருவரும் ஊரை விட்டு வெளியேறி துாத்துக்குடியில் வசித்தனர். கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் இருவரும் லட்சுமிபுரம் கோவிலுக்கு வந்தனர்.அப்போது, ராஜேஸ்வரி தன் குழந்தைகளை உடன் அழைத்துச் செல்வது தொடர்பாக குமாரிடம் பேசியுள்ளார். இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த குமார், ராஜேஸ்வரியை அடித்துக் கொலை செய்து, கிணற்றில் வீசினார்.ஒரு வாரம் கழித்து கிணற்றில் மிதந்த ராஜேஸ்வரி உடலை போலீசார் மீட்டு தற்கொலை வழக்காக பதிவு செய்தனர்.விசாரணையில் ராஜேஸ்வரியை குமார் கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து தற்கொலை வழக்கு, கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது.குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பளித்தார். அரசு வழக்கறிஞர் ஜான்ஸி ஆஜரானார்.
17 hour(s) ago
17 hour(s) ago