உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நண்பரை கொன்றவருக்கு 10 ஆண்டுகள் சிறை

நண்பரை கொன்றவருக்கு 10 ஆண்டுகள் சிறை

ஸ்ரீவில்லிபுத்தூர்:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் துரைசாமிபுரம் செங்குட்டுவன் தெருவைச் சேர்ந்தவர் பொன்ராஜ் 27, இவரது நண்பர் ஜெகநாதன் 27. இருவரும் கூலித்தொழிலாளர்கள். 2013ல் பொன்ராஜிற்கு திருமணம் நடந்த நிலையில் அவரது வீட்டிற்கு வந்து அவரது மனைவியிடம் ஜெகநாதன் அடிக்கடி பேசி வந்துள்ளார். இதனை பொன்ராஜும், அவரது தந்தையும் கண்டித்துள்ளனர்.2013 ஆக., 9 காலை 10:00 மணிக்கு பொன்ராஜ் வீட்டில் இருந்தபோது அங்கு வந்த ஜெகநாதன் தகராறு செய்து அவரை கத்தியால் குத்தி கொலை செய்தார்.ஜெகநாதனை ராஜபாளையம் தெற்கு போலீசார் கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கில் ஜெகநாதனுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி சுதாகர் தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை