புதிதாக 105 டிரான்ஸ்பார்மர்கள்
விருதுநகர் : மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் லதா செய்திக்குறிப்பு:விருதுநகர் மாவட்டத்தில் குறைந்த அழுத்த மின்சாரம் விநியோகமான பகுதிகளில் அதிக மின்பளு உள்ள மின்மாற்றிகள் கண்டறியப்பட்டது. இதில் குறைந்த மின் அழுத்தம், கூடுதல் மின் பளு குறைபாட்டை நிவர்த்தி செய்ய ஜூலை 1 முதல் தற்போது வரை புதிதாக 105 டிரான்ஸ் பார்மர்கள் அமைக்கப்பட்டுள்ளது.வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. பழுதடைந்த மின் கம்பிகள், கம்பங்கள், வயர்களை மாற்றுதல், மரக்கிளைகளை அகற்றுதல், மின் மாற்றிகளை பராமரித்தல் ஆகிய பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.