உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / டூவீலர் மீது பஸ் மோதல் 2 பேர் பலி; 2 பேர் காயம்

டூவீலர் மீது பஸ் மோதல் 2 பேர் பலி; 2 பேர் காயம்

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் தாலுகா மானகசேரியை சேர்ந்தவர்கள் பால்சாமி 55, கிருஷ்ணமூர்த்தி 35, வைரவன் 51, கொத்தனார் வேலை செய்து வந்தனர்.நேற்று காலை 9:00 மணிக்கு டூவீலரில் மூன்று பேரும் மானகசேரியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்துார் நோக்கி வந்தனர். அப்போது சிவகாசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்துார் நோக்கி சென்ற தனியார் பஸ் டூவீலரின் பின்னால் மோதியது.இதில் சம்பவ இடத்தில் பால்சாமி உயிரிழந்தார். வைரவன் விருதுநகர் மருத்துவமனையில் உயிரிழந்தார். கிருஷ்ண மூர்த்தி காயமடைந்தார். அதே நேரம் எதிர் திசையில் டூவீலரில் வந்த வள்ளிநாயகமும் 75, பஸ் மோதி காயமடைந்தார். காயமடைந்தவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். மல்லி போலீசார் விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை