உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிறுமியை கடத்தி தொல்லை டிரைவருக்கு 20 ஆண்டு சிறை

சிறுமியை கடத்தி தொல்லை டிரைவருக்கு 20 ஆண்டு சிறை

ஸ்ரீவில்லிபுத்தூர்:விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா மல்லாங்கிணரில் சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த கார் டிரைவர் ஆனந்தகிருஷ்ணனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.மல்லாங்கிணரைச் சேர்ந்த ஆனந்த கிருஷ்ணன் 29, கார் டிரைவராக உள்ளார். இவர் 2021 அக்.,12ல் 17 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி திருச்செந்தூருக்கு கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மல்லாங்கிணறு போலீசார் அவரை கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது.இதில் ஆனந்தகிருஷ்ணனுக்கு சிறுமியை கடத்தி சென்றதற்கு 10 ஆண்டுகள் சிறையும், பாலியல் தொல்லை கொடுத்ததற்கு 20 ஆண்டுகள் சிறையும், குழந்தை திருமண குற்றத்திற்கு 2 ஆண்டுகள் சிறையும், ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்தும், சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டு நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை