| ADDED : அக் 19, 2025 06:00 AM
விருதுநகர்: அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் ராமஜெயந்தி செய்திக்குறிப்பு: 2014 மார்ச் முதல் 2018 செப். வரை மேல்நிலை பொதுத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்களின் அசல் மதிப்பெண் சான்றுகள் உரிமைக் கோரப்படாமல் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் உள்ளன. அவைகளை உடனடியாக அழிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த 3 மாதங்களுக்கு இறுதி அவகாசம் வழங்கப்பட்டு ஜன. 10க்கு பின் இந்த சான்றுகள் எவ்வித அறிவிப்புமின்றி அழிக்கப்படும். இந்த இடைப்பட்ட காலத்தில் உரிமைக் கோராத சான்றுகளுக்கான தனித் தேர்வர்கள் இவ்வலுகலகத்தை உரிய சான்றுடன் நேரில் அணுகியோ அல்லது துணை இயக்குனர்(மேல்நிலை), அரசுத் தேர்வுகள் இயக்ககம், பேராசியர் அன்பழகன் கல்வி வளாகம், கல்லுாரிச் சாலை, நுங்கம்பாக்கம், சென்னை - 6 என்ற முகவரிக்கு ரூ.45க்கான அஞ்சல் தலை ஒட்டப்பட்ட சுய முகவரியிட்ட உறையுடன் விண்ணப்பித்து மதிப்பெண் சான்றை பெற்றுக் கொள்ளலாம், என்றார்.