உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தொழிலாளிக்கு கத்திக்குத்து 3 பேருக்கு 2 ஆண்டு சிறை

தொழிலாளிக்கு கத்திக்குத்து 3 பேருக்கு 2 ஆண்டு சிறை

ஸ்ரீவில்லிபுத்துார்: ராஜபாளையம் அருகே ரெட்டியபட்டியைச் சேர்ந்தவர் துரைப்பாண்டி 24, மில் தொழிலாளி. இவர் 2021 ஜன.13 இரவு 12:00 மணிக்கு மில் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது அவரை வழிமறித்து முன் விரோதத்தில் கோடங்கிபட்டியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் 21, கமலேஷ் 20, ராஜபாளையத்தை சேர்ந்த அஜித்குமார் 21 ஆகியோர் கத்தியால் குத்தினர். கீழ ராஜகுமாரமன் போலீசார் மூவரையும் கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்துார் தீண்டாமை வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில் மூவருக்கும் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி சுதாகர் தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !