உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கிணற்றில் விழுந்த 3 காட்டு பன்றி குட்டிகள் மீட்பு

கிணற்றில் விழுந்த 3 காட்டு பன்றி குட்டிகள் மீட்பு

திருச்சுழி: திருச்சுழியில் கார்த்தியப்ப நகரை சேர்ந்த அனுசுயாதேவிக்கு சொந்தமான தோட்டத்தில் உறை கிணறு உள்ளது. நேற்று காலை தோட்டத்திற்கு வழி தவறி வந்த 3 காட்டுப்பன்றி குட்டிகள் கிணற்றில் தவறி விழுந்தன. பின் தத்தளித்து கிணற்றின் கல் திட்டில் ஒதுங்கின. திருச்சுழி தீயணைப்பு நிலைய அலுவலர் சந்திரசேகரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பன்றி குட்டிகளை மீட்டு வனக்காப்பாளர் ராஜேந்திர பிரபுவிடம் ஒப்படைத்தனர். மருத்துவ பரிசோதனைக்கு பின் பன்றி குட்டிகள் காட்டில் விடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி