மேலும் செய்திகள்
வீட்டுமனை தகராறு 6 பேர் கைது
18-Dec-2024
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் 4 நாட்டு வெடிகுண்டுகள் பிடிபட்ட சம்பவத்தில் கணவன், மனைவி, ஒரு சிறுவன் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு ஆட்டு வாசலை சேர்ந்தவர் சூர்யா 40, மம்சாபுரத்தைச் சேர்ந்தவர் சங்கிலி 40, இருவரும் விவசாய கூலி தொழிலாளர்கள்.இருவருக்கும் இடையே ரூ. 2 ஆயிரம் பணம் கொடுக்கல், வாங்கலில் விரோதம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் மதியம் சூர்யா வீட்டில் இருந்தபோது, அங்கு தன்னுடைய 16 வயது மகன் மற்றும் உறவினர் பாண்டி 32, என்பவருடன் வந்த சங்கிலி தகராறில் ஈடுபட்டனர்.அப்போது அவர்கள் மீது சூர்யா நாட்டு வெடிகுண்டுகளை எறிந்துள்ளார். அவை வெடிக்காமல் அருகில் இருந்த செடியில் விழுந்தன. அடிதடி மோதலில் சூர்யாவும், சங்கிலியும் காயமடைந்தனர்.நேற்று காலை சம்பவ இடத்தில் போலீசார் நடத்திய சோதனையில், 4 நாட்டு வெடிகுண்டுகளை கண்டெடுத்தனர்.சங்கிலி புகாரில் சூர்யா, அவரது மனைவி தவசியம்மாளையும், சூர்யா புகாரில் சங்கிலி, அவரது 16 வயது மகன், பாண்டி ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
18-Dec-2024