உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வங்கி கடன் வழங்கியதில் ரூ.3 லட்சம் மோசடி மேலாளர் உட்பட இருவருக்கு 5 ஆண்டு சிறை

வங்கி கடன் வழங்கியதில் ரூ.3 லட்சம் மோசடி மேலாளர் உட்பட இருவருக்கு 5 ஆண்டு சிறை

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாத்துார் தாய்கோ வங்கி கிளைகளில் போலி ஆவணங்கள் தயாரித்து தனி நபர்களுக்கு கடன் வழங்கி அரசு நிதி ரூ.3 லட்சம் மோசடி செய்ததாக, ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் ராமச்சந்திரன் 75, இருக்கன்குடி பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலக உதவியாளர் திருநாவுக்கரசு 76, ஆகியோருக்கு 5 ஆண்டு சிறை விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.2001--2004ல் சிவகாசி, சாத்துார் தாய்கோ வங்கி கிளைகள் மூலம் வழங்கப்பட்ட தனிநபர் கடன்களில் கிளை மேலாளர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டு அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தி வருவதாகவும், அதனை விசாரித்து நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு சிறு தொழில் அரசு செயலர், மாநில லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனருக்கு புகார் அளித்திருந்தார்.அதன்படி விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரணை நடத்தி, ரூ.3 லட்சம் அரசு நிதி இழப்பீடு செய்யப்பட்டிருப்பதை கண்டறிந்தனர்.இது தொடர்பாக சிவகாசி தாய்கோ வங்கி கிளை மேலாளர் ராமச்சந்திரன், பொதுப்பணித்துறை இருக்கன்குடி நீர்தேக்கத்திட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலக உதவியாளர் ராஜன், ராஜபாளையம் மேல வைப்பார் வடிநிலக்கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலக உதவியாளர் திருப்பதி வெங்கடாசலம், விருதுநகர் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலக இளநிலை உதவியாளர் திருநாவுக்கரசு ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.இவ்வழக்கு ஸ்ரீவில்லிபுத்துார் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை காலத்தின் போது ராஜன், திருப்பதி வெங்கடாசலம் இறந்துவிட்டனர்.ராமச்சந்திரன், திருநாவுக்கரசு ஆகியோருக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ. 35 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பிரித்தா தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை