உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கடைக்குள் புகுந்த மினி பஸ்

கடைக்குள் புகுந்த மினி பஸ்

சாத்துார் : சாத்துார் அருகே துரித உணவகத்தின் மீது மினிபஸ் மோதியதில் 3 பேர் காயமடைந்தனர்.கீழஒட்டம்பட்டியை சேர்ந்தவர் ராஜாக்கனி, 30. மினி பஸ் டிரைவராக உள்ளார். நேற்று இரவு 9:00 மணிக்கு சாத்துாரில் இருந்து மேட்டுப்பட்டி சென்ற பஸ்சை ஓட்டிச் சென்றார்.பெரியகொல்லப்பட்டி விலக்கு அருகே சென்ற போது டிரைவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. கட்டுப்பாட்டை இழந்த பஸ் ரோட்டோரம் இருந்த ராஜகோபாலின் துரித உணவகத்தில் புகுந்து ஊர் பெயர் தாங்கிய கம்பத்தில் மோதி நின்றது.பஸ்சில் வந்த ஓ. மேட்டுப்பட்டியைச் சேர்ந்த குருநாதன் 19, சின்னக் கொல்லப்பட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் 55, டிரைவர் ராஜாக்கனி மூவரும் காயமடைந்து சாத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாத்தூர் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ