உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / உரிமம் பெறாத கைத்துப்பாக்கி வைத்திருந்த போலீஸ்காரர் கைது

உரிமம் பெறாத கைத்துப்பாக்கி வைத்திருந்த போலீஸ்காரர் கைது

விருதுநகர்: விருதுநகர் ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணிபுரியும் தனுஷ்கோடி 33, உரிமம் பெறாத கைத்துப்பாக்கி வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார். துாத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர், திருட்டு டூவீலரில் தப்பிச் சென்றதாக விருதுநகர் மாவட்ட போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. விருதுநகர் பட்டம்புதுார் அருகே சந்தேகப்படும்படி சுற்றி திரிந்த அவர்களை ஆர்.ஆர்.நகரில் வச்சக்காரப்பட்டி போலீசார் பிடித்தனர்.அதில் ஒருவர் மாவட்ட ஆயுதப்படையில் போலீசாக பணிபுரியும் கூமாபட்டியைச் சேர்ந்த தனுஷ்கோடி ஆவார். இவர் உரிமம் பெறாத கைத்துப்பாக்கி வைத்திருந்ததும், அதில் 5 தோட்டாக்கள் மட்டுமே இருப்பதும், இவர் மீது ஏற்கனவே வத்திராயிருப்பு ஸ்டேஷனில் மணல் கடத்தல் வழக்கு நிலுவையில் உள்ளதும் விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து தனுஷ்கோடியை போலீசார் கைது செய்தனர். மற்றொரு நபரிடம் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி