உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பள்ளி வளாகத்திற்குள் இடியும் நிலை தொட்டி

பள்ளி வளாகத்திற்குள் இடியும் நிலை தொட்டி

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே பள்ளி வளாகத்திற்குள் இடியும் நிலையில் மேல்நிலை தொட்டி இருப்பதால் மாணவர்கள் பீதியில் உள்ளனர்.அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது பெரிய வள்ளிகுளம் ஊராட்சி. இங்கு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இதில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளிக்குள் மேல்நிலைத் தொட்டி பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு குடிநீர் வினியோகம் நடந்தது. தொட்டி சேதமடைந்து போனதால் ஒராண்டாக குடிநீர் ஏற்றப்படாமல் உள்ளது.தொட்டி இடியும் நிலையில் இருப்பதால் இதை அகற்றக் கோரி 6 மாதமாக ஊராட்சி, ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. தொட்டியை இடிப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பள்ளிக்குள் மாணவர்கள் பீதியுடன் வந்து செல்ல வேண்டியுள்ளது. மேல்நிலை தொட்டியை உடனடியாக இடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை