உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  காதல் தோல்வியால் வாலிபர் ரயிலில் விழுந்து தற்கொலை

 காதல் தோல்வியால் வாலிபர் ரயிலில் விழுந்து தற்கொலை

விருதுநகர்: விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் மாரிசெல்வம் 21. காதல் தோல்வியால் நேற்று முன்தினம் இரவு நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் விழுந்து தற்கொலை செய்தார். ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர். மாரிசெல்வம் பிரபல சமையல் எண்ணெய் தயாரிப்பு நிறுவனத்தில் விற்பனை பிரிவு மேலாளராக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் இரவு 10:15 மணிக்கு திருநெல்வேலி - சென்னை நோக்கி சென்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் விழுந்து தற்கொலை செய்தார். ரயில்வே போலீசார் உடலை மீட்டு விசாரித்தனர். போலீசார் கூறியதாவது: மாரிசெல்வமும், அதே பகுதி பிளஸ் 2 மாணவியும் 5 ஆண்டுகளாக காதலித்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் காதலி தற்போது காதலிக்க மறுத்துள்ளார். மனமுடைந்த மாரிசெல்வம் ரயிலில் விழுந்து தற்கொலை செய்துள்ளார், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ