உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்

நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்

அருப்புக்கோட்டை: மாவட்டம் முழுவதும் நாய்கள் தொல்லை தான் பெரும் பிரச்சனையாக உள்ளது நாயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும், என கலெக்டர் ஜெயசீலன் அருப்புக்கோட்டை நகராட்சி கூட்டத்தில் தெரிவித்தார்.அருப்புக்கோட்டை நகராட்சியில் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டார். ஆர்.டி.ஓ., வள்ளிக் கண்ணு, நகராட்சி தலைவர் சுந்தரலட்சுமி, துணை தலைவர் பழனிச்சாமி, கமிஷனர் ராஜமாணிக்கம், தாசில்தார் செந்தில்வேல் மற்றும் பிற துறை அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கவுன்சிலர்கள் கூறுகையில்,'' நகரில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. டூ வீலரில் செல்பவர்களை விரட்டி கடிக்கிறது. நாய்களை கட்டுபடுத்த என்ன தான் வழி. தும்பைகுளம் கண்மாயை தூர் வாரி பராமரிக்க வேண்டும். மழை காலத்தில் கண்மாய் தண்ணீர் தெருக்களில் வந்து விடுகிறது. விருதுநகர் ரோடு, பாவடி தோப்பு பகுதியில் உள்ள மெயின் ஓடை தூர் வார வேண்டும். கண்மாயின் நீர்பிடிப்பு பகுதிகள் ஆக்கிரமிப்பில் உள்ளது. நகராட்சி மயானத்தில் நினைவு சின்னம் கட்டுவதால் இட நெருக்கடி ஏற்படுகிறது. தெற்கு தெரு பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. இவற்றை அகற்ற வேண்டும்.கலெக்டர் ஜெயசீலன் கூறுகையில்,'' மாவட்டத்தில் பெரிய பிரச்சனையே நாய்கள் தொல்லைகள் தான். கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒரு தேதியை அறிவித்து ஆக்கிரமிப்புக்களை ஏற்பாடு செய்யப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ