உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிலம்பு எக்ஸ்பிரசில் கூடுதல் பெட்டி * --பயணிகள் மகிழ்ச்சி

சிலம்பு எக்ஸ்பிரசில் கூடுதல் பெட்டி * --பயணிகள் மகிழ்ச்சி

ராஜபாளையம்:செங்கோட்டை - தாம்பரம் இடையே இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் (20681/20682) கூடுதலாக ஒரு பெட்டி இணைக்கப்பட்டு ஆக. 28 வரை மொத்தம் 24 பெட்டிகளுடன் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளதற்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். சென்னை - செங்கோட்டை இடையே புதன், வெள்ளி, சனிக்கிழமைகளில் இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில், எழும்பூர் ரயில் நிலைய கட்டுமான பணி காரணமாக, நவம்பர் முதல் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. அதுவரை 17 பெட்டிகளுடன் இயங்கிய இந்த ரயிலில் நவம்பரில் 1 இரண்டாம் வகுப்பு ஏசி, 2 மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டி, 2 இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பர், 1 முன்பதிவு இல்லாத பெட்டி என 6 பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட்டு 23 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வருகிறது. கூடுதல் பெட்டிகள் தற்காலிகமாக ஜனவரி வரை அறிவிக்கப்பட்டது. பின் பிப். வரையும், தொடர்ந்து ஜூன் 19 வரையும் நீட்டிப்பு செய்யப்பட்டது. கூடுதல் பெட்டிகள் இணைப்பு இன்றுடன் நிறைவு பெற உள்ள நிலையில் நேற்று முதல் இதில் மேலும் ஒரு சாதாரண படுக்கை பெட்டி இணைக்கப்பட்டு ஆக. 28 வரை 24 பெட்டிகளுடன் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கூடுதல் பெட்டிகள் அறிவிப்பு ரயில் பயணிகள் இடையே மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை