மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
12 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
12 hour(s) ago
அருப்புக்கோட்டை : வைகையில் இருந்துகூடுதலாக தண்ணீர் திறக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.காவிரி வைகை குண்டாறு பாசன விவசாயிகள் சங்க தலைவர் ராம்பாண்டியன் கூறியதாவது: திருமங்கலம் கால்வாயில் வரக்கூடிய வைகை நீர் பிரதான கால்வாய்கள் வழியாக வந்தடைந்து, வாகைகுளம், சாத்தங்குடி, உறப்பனூர் கண்மாய் நிறைந்து, இதன் வழியாக திருமங்கலம் தெற்காறு வழியாக கல்லணை கொக்குளம் தண்ணீர் வந்து தடுப்பணை மூலம் நீர் பங்கிட்டு முறையில் கம்பிக்குடி, சத்திரம் புளியங்குளம், தோப்பூர் போன்ற கண்மாய்கள் பெருகும். இதனால் 2 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.தொடர் மழை பெய்தும் கண்மாய்கள் நிறையாமல் இருப்பது வேதனைக்கு உரியது. பெரியாறு, வைகை அணை நிரம்பி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், இப்பகுதி விவசாயிகள் தண்ணீரை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அரசு இதை கவனத்தில் கொண்டு தெற்காற்றில் தண்ணீர் வருவதை உறுதி செய்ய வேண்டும், என்றார்.-
12 hour(s) ago
12 hour(s) ago