உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / உதவியாளரை தாக்கிய ஆதிதிராவிட நலக்குழு உறுப்பினர் நீக்கம்

உதவியாளரை தாக்கிய ஆதிதிராவிட நலக்குழு உறுப்பினர் நீக்கம்

விருதுநகர்: விருதுநகரில் அலுவலகத்தில் புகுந்து உதவியாளரை தாக்கிய ஆதிதிராவிட நலக்குழு உறுப்பினர் எஸ்.பி.மாரியப்பனை நீக்கம் செய்து கலெக்டர் ஜெயசீலன் உத்தரவிட்டார்.விருதுநகர் காளப்பெருமாள் பட்டியை சேர்ந்த எஸ்.பி.மாரியப்பன் மாவட்ட அளவிலான ஆதிதிராவிடர் நலக்குழுவின் உறுப்பினராக செயல்பட்டு வந்தார். ஆதிதிராவிட நலத்துறை அலுவலகத்தின் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வரும் பிரேம்குமார், தன்னை மாரியப்பன் தாக்கியதாக ஜன.,1ல் கலெக்டர் ஜெயசீலனிடம் புகார் அளித்தார்.கலெக்டரின் நேர்முக உதவியாளர் பிர்தோஷ் பாத்திமாவைவிசாரணை அதிகாரியாக நியமித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டார். இந்நிலையில் எஸ்.பி.மாரியப்பன், உதவியாளரானபிரேம்குமாரை தாக்கி, அலுவலகத்தில் பணியாளர்களை பணி செய்யவிடாமல் இடையூறு செய்தது உண்மை என்றும், ஒருமையில் பேசி கொலைமிரட்டல் விடுத்ததும் உண்மை என்றும்,இதற்கு முன்பே நலக்குழு உறுப்பினராக இருந்த மாரியப்பன் புகார்கள், வழக்குகள் காரணமாக நீக்கப்பட்டு, தற்போது மீண்டும் உறுப்பினராக 2023 முதல் 2026 வரை தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றும் அறிக்கையில் தெரிவித்தார்.மேலும் அறிக்கையில், இவர் விடுதிகளுக்கு ஆய்வுக்கு சென்று விடுதி காப்பாளர், அடிப்படை ஊழியர்களை கலெக்டரிடம் புகார் செய்வேன் என்று மிரட்டுவதும், அதிகார தோரணையில் பேசி அநாகரிமாக செயல்பட நலக்குழு உறுப்பினர் என்ற பொறுப்பை பயன்படுத்தி ஊழியர்களை மிரட்டி வருகிறார் என்றும்,மேலும் நீண்டகாலமாக ஆண் உறுப்பினர்கள் மட்டுமே உறுப்பினர்களாக தொடர்ந்து வருவதால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நலக்குழு உறுப்பினராக உள்ள எஸ்.பி.மாரியப்பனை நீக்கம் செய்து பெண் உறுப்பினரை நியமனம் செய்யலாம் என்றும் பரிந்துரைத்தார்.இதன் அடிப்படையில் கலெக்டர் ஜெயசீலன் எஸ்.பி.மாரியப்பனைபதவிநீக்கம் செய்தார். பெண் உறுப்பினரை நியமிக்கவும் பரிந்துரைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை