மேலும் செய்திகள்
தெற்கு நகர அ.தி.மு.க., பூத் கூட்டம்
15-Apr-2025
விருதுநகர்; விருதுநகர் சத்திரரெட்டியாபட்டியில் அ.தி.மு.க., சார்பில் கிழக்கு ஒன்றியம் பூத் செயலாளர்கள், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அமைப்புச் செயலாளர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடந்தது.அவர் பேசியதாவது: அ.தி.மு.க.,வில் இளைஞர்களை சேர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் பூத் கமிட்டி நிர்வாகிகளாக படித்தவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மனிதாபிமானவர்களால் வளர்க்கப்பட்ட கட்சியில் அனைத்து சமூக நிர்வாகிகள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.அ.தி.மு.க., வை நம்பியவர்கள் கெட்டதில்லை. அதன் பொதுச் செயலாளர் பழனிசாமி, அனைவரையும் அரவணைத்துச் செல்லக் கூடியவர். அவர் எடுக்கும் முடிவுகளை அரசியல் வல்லுனர்கள் போற்றுகின்றனர். அவர் தலைமையை ஏற்று படித்தவர்கள் பூத் நிர்வாகிகளாக சேர்ந்துள்ளனர், என்றார்.சிறுபான்மை நலப்பிரிவு பொருளாளர் ஜான் மகேந்திரன், எம்.ஜி.ஆர்., மன்ற பொருளாளர் கலாநிதி, அவைத்தலைவர் விஜயகுமாரன், கிழக்கு ஒன்றிய செயலாளர் தர்மலிங்கம், மேற்கு ஒன்றிய செயலாளர் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் அருணா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
15-Apr-2025