உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / திராவிட மொழிகள் அனைத்தும் சிறப்பானவை: எம்.பி. பேட்டி

திராவிட மொழிகள் அனைத்தும் சிறப்பானவை: எம்.பி. பேட்டி

சாத்துார்: திராவிட மொழிகள் அனைத்தும் சிறப்பானது என மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.வெற்றிலையூரணியில் புதிய பயணிகளின் நிழல் குடையை திறந்து வைத்த மாணிக்கம் தாகூர் எம்.பி., கூறியதாவது:நடிகர் கமல் கன்னட மொழி குறித்து பேசிய விவகாரத்தை வைத்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அரசியல் செய்கிறார். எந்த மொழி பழமையானது என்பது குறித்து வரலாற்று ஆய்வாளர்கள் தான் நிர்ணயிக்க முடியும் அரசியல்வாதிகளால் முடியாது. திராவிட மொழிகள் அனைத்துமே சிறப்பானவை.கீழடியில் வரலாற்று ஆய்வாளர்கள் செய்த ஆராய்ச்சியை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை இது குறித்து யாரும் கேள்வி கேட்கவில்லை சீமான் இங்கு குரல் கொடுப்பதை விட கர்நாடகா சென்று குரல் கொடுக்க வேண்டும்.கமல்பேசியது குறித்து நாம் பெரிது படுத்த தேவையில்லை. பா.ம.க.,வில் அப்பாவும் மகனும் பொழுதுபோக்குக்காக அரசியல் செய்கிறார்கள்.பா.ஜ., தோல்வி அடையும் மாநிலங்களில் பூத் கமிட்டி அமைப்பதற்கு பதிலாக சி.பி.ஐ மற்றும் அமலாக்க துறையை தன்னுடைய கிளை அமைப்பாக செயல்படுத்துவதை காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி