உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் 1994--98 பேட்ஜ் மாணவர்கள் சந்திப்பு மற்றும் வெள்ளி விழா நடந்தது.பல்கலைக்கழக துணைத் தலைவர் சசி ஆனந்த் தலைமை வகித்தார். துணை வேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் பேராசிரியை முருகேஸ்வரி வரவேற்றார்.விழாவில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். அவர்களுக்கு வகுப்பு நடத்திய பேராசிரியர்கள் ஸ்ரீகுமார், தேவராஜ், துரைராஜ், சபாபதி, செந்தில் பேசினர். முன்னாள் மாணவர்கள் சங்கர், பெர்வின், பிரியா பேசினர். நோவெல் டிரஸ்ட் துவக்கப்பட்டு வெள்ளிவிழா மலர் வெளியிடப்பட்டது.பின்னர் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பதிவாளர் வாசுதேவன் பரிசுகளை வழங்கினார். ஏற்பாடுகளை முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் தனலட்சுமி, கைலாசம் பாலமுருகன், கந்தசாமி, சத்தியமூர்த்தி செய்தனர். தங்கவேல் சங்கர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை