உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

 முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

சிவகாசி: சிவகாசி பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரியின் முன்னாள் மாணவர்கள் சங்க கூட்டம் பெங்களூருவில் நடந்தது. பி.எஸ்.ஆர்., கல்வி குழுமம் தாளாளர் சோலைசாமி தலைமை வகித்தார். கல்லுாரி இயக்குனர்கள் அருண்குமார், விக்னேஸ்வரி முன்னிலை வகித்தனர். முதல்வர் செந்தில் குமார் துவக்கி வைத்தார். டீன் மாரிசாமி வாழ்த்தினார். முன்னாள் மாணவர் ராஜ சொக்கலிங்கம் வரவேற்றார். முன்னாள் மாணவர்கள் சுந்தர் மகேஷ், பெலிக்ஸ் ஜான் ரோஸ் பேசினர். மாணவர் சங்க ஆண்டறிக்கையை சங்க செயலாளர் ரமணி வாசித்தார். முன்னாள் மாணவர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். கல்வி குழுமம் தாளாளர், போட்டியில் வெற்றி பெற்ற முன்னாள் மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். பங்கேற்ற அனை வருக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னாள் மாணவர் ராஜகோபால் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லுாரி நிர்வாகம், முன்னாள் மாணவர்கள், பேராசிரியர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை